Daily Manna 24

இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். சங்:127:4

அன்பானவர்களே!

ஒரு தம்பதியினர் அநேக வருடங்களாக பிள்ளைகள் இல்லாததால் ஒரு பிள்ளையை எடுத்து வளர்ப்பதற்குத் தீர்மானம் பண்ணி, குழந்தை ஒன்றைத் தேட ஆரம்பித்தனர். மனதுக்குப் பிடித்த மாதிரி குழந்தை அமையாததால், பின்னர் பார்ப்போம் என்று சற்றுக் காலதாமதம் செய்தனர்.

அச்சமயத்தில் அந்த மனைவி தன் மனதை மாற்றிக் கொண்டு, குழந்தையை நான் தத்தெடுக்கவில்லை. தேவனுக்குச் சித்தமானால் நமக்கு ஒரு குழந்தையைத் தரட்டும் என்று காத்திருந்தாள். சிறிது காலங்களில் அவள் கர்ப்பவதியானாள். திருமணமாகி கிட்டத்தட்ட 16 வருடங்களின் பின்னர், தனது நாற்பதாவது வயதில் ஒரு குழந்தைக்கு அவள் தாயானாள். இது அற்புதமல்லவா? பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்.

வேதம், கர்த்தருக்குப் பயந்து அவரது வழிகளில் நடக்கிறவனுக்குக் கிடைக்கும் ஆசிகளைக் குறித்துப் பேசுகிறது. அவற்றில், ‘உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்’. இதிலிருந்து பிள்ளைகள் கர்த்தரால் வரும் ஆசியே என்பது திட்டவட்டமாகப் புலனாகிறது.

இந்த நவீன உலகில் மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறியிருக்கும் காலகட்டத்தில், பிள்ளைகளைக் கர்ப்பத்தில் உருவாக்குவதற்கு எத்தனையோ வழிமுறைகள்
கண்டுபிடிக்கப்பட்டாலும், அவைகள் நூற்றுக்கு நூறுவீதம் பலனளிப்பது கிடையாது.

இதற்குக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்? கடவுளின் செயலின்றி மனிதனால் எதையும் செய்திட இயலாது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும். இன்று ஏதாவது ஒரு வியாதி வந்தால் நாம் உடனே மருத்துவரை நாடி ஓடுகிறோம்.
ஆனால், அன்று தன் மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான். கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டு அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரிக்க செய்தார்.

வேதத்தில் பார்ப்போம்,

உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
உபா: 28:11

ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
லூக்கா: 1:42

பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம். பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
நீதி:17:6

பிரியமானவர்களே,

நமது பிள்ளைகள் ஆண்டவர் நமக்குத் தந்த ஆசீர்வாதத்தின் ஊற்றுக்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் போது தான், அவர்களைத் தேவனுக்குரியவர்களாக வளர்க்க வேண்டும் என்னும் பொறுப்பு நமக்குண்டு என்பதை நம்மால் உணர முடியும்.

நமது பொருட்களை நாம் இஷ்டத்துக்குக் கையாண்டாலும், பிறரின் பொருட்களை நாம் கவனமாகக் கையாளுவதுண்டு. ஏனெனில், அதை உரியவர்களிடம் திருப்பிக் கையளிக்க வேண்டும். இந்த உணர்வு இல்லையேல், அதைப் போட்டு உடைத்து விட்டு உரியவர் முன்பாகத் தலைகுனிய வேண்டியதுதான். அதுபோலவே, நமது பிள்ளைகளும் தேவன் நமக்குத்தந்த ஆசியே. அவர்கள் தேவனுக்கு உரியவர்கள்.

அவர்களை தேவனுக்குரியவர்களாய் வளர்த்து, அவரிடம் கையளிப்பது பெற்றோராகிய நமது பொறுப்பாகும்.

‘அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு, உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்’ (ஆதி.33:5).

பிள்ளைகளை நமக்கு அருளியவர் யார் என்பதைச் சிந்தித்திருக்கிறோமா? அவர்கள் தேவனுக்கு உரியவர்கள். எனவே அவருக்காய் வளர்ப்போம்.

இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம் என்று ஏசாயா தீர்க்கதரிசி போல நாமும் நம்முடைய பிள்ளைகளை கர்த்தருக்குரியவர்களாய் வளர்க்க நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக.
ஆமென்

  • Related Posts

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    நாவின் அதிகாரம்: வார்த்தைகள் வாழ்க்கையையும் உறவுகளையும் எப்படி மாற்றுகின்றன

    நாவின் அதிகாரம் ஏன் நம்மை எச்சரிக்கச் செய்கிறது? நாவின் அதிகாரம் என்பது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் வேதாகமம் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் காட்டுகிறது. நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை உயர்த்தவும் முடியும், அதே நேரத்தில் ஒருவரின் மனதை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships