Daily Manna 273

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன். சங்கீதம் 122:1

எனக்கு அன்பானவர்களே!

தமது ஆலயத்தின் சம்பூரணத்தினால் நம்மை நிரப்பி ஆசீர்வதிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு தம்பதியினர் ஒரு ஞாயிற்றுக்கிழமை
காலையில் சோம்பலாக படுத்திருந்தனர். அதில் மனைவி எழுந்து ஆலயத்திற்கு செல்ல புறப்பட ஆரம்பித்தார்கள். ஆனால் கணவரோ எழுந்து புறப்படுகிற வழியாக இல்லை.

அப்போது மனைவி, ‘என்னங்க. ஆலயத்திற்கு புறப்படவில்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு கணவர், ‘நான் இன்று ஆலயத்திற்கு வரப் போவதில்லை,
ஆகையால் புறப்படவில்லை’ என்று கூறினார்.

அதற்கு மனைவி, ஏன் என்று கேட்டதற்கு, ‘நான் ஆலயத்திற்கு வராததற்கு மூன்று காரணங்கள் உண்டு, முதலாவது, ஆலயம் அனலுமில்லாமல், குளிருமில்லாமல் இருக்கிறது.

இரண்டாவது, அங்கு என்னை விரும்புகிறவர்கள் யாரும் இல்லை, மூன்றாவது, எனக்கு அங்கு போக வேண்டும் என்று எந்த விருப்பமும், ஆர்வமும் இல்லை’ என்று கூறினார்.

இன்று அநேகர் இப்படித் தான் அற்ப காரணங்களுக்காக தேவனுடைய ஆலயத்தை, சபைக் கூட்டங்களை அலட்சியப்படுத்துகின்றார்கள். அதை அற்பமாய் எண்ணுகிறார்கள்.

இன்னும் சிலர் தலைவலி, குழந்தைகள் இருக்கின்றனர் என்றும்,வீட்டில் உள்ள வேலைகள், உறவுகளின் வருகை, வீட்டு விஷேச நிகழ்வுகள் என்று கூறி ஆண்டவரை மறுதலித்துக் கொண்டு தங்களை அறியாமலயே பாதாளத்திற்கு நேராக சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆலயக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாமல் போனதைக் குறித்து அவர்கள் வருத்தப்படுவதுமில்லை. அதைக் குறித்து யோசிப்பதும் இல்லை.
நீங்கள் அசட்டை செய்வது ஆலயத்தை அல்ல, ஆண்டவரின் கட்டளையை என்பதை மறந்து போகாதேயுங்கள்.

ஆனால் இதனால் நமக்குத் தான் மிகப்பெரிய இழப்பு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளாமல் போகிறார்கள். நாம்
கர்த்தருடைய ஆலயத்திற்கு வர வேண்டும் என்று சொன்னால் நமக்கு ஆண்டவரின் அனுக்கிரகம் இருக்க வேண்டும்.

வேதம் சொல்லுகிறது, ‘உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்’ சங்கீதம் 36:8 என்ற வசனத்தின்படி தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

அது மட்டுமல்ல இயேசு கிறிஸ்து கூறுகின்றார். இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்’
மத்தேயு 18:20 என்று வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் நிச்சயமாக நாம் சபையாக கூடும் நேரத்தில் நம் மத்தியில் இருப்பார்.

அங்கு அவருடைய பிரசன்னம் அளவில்லாமல் நிரம்பி வழிகிறதாய் இருக்கும். அவருடைய பிரசன்னத்தில் நாம் இருக்கும் போது, குறைகளெல்லாம் நிறைவாக மாறி விடும். நம்மிடத்தில் காணப்படும் எல்லா குறைகளும் மாற்றப்பட்டு, நம்மை நிறைவானவர்களாக தேவன் மாற்றி விடுவார்.

வேதத்தில் பார்ப்போம்,

உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக் கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
1 சாமுவேல்: 12 :24.

மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது.
1 நாளாகமம் :16 :27.

தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
நீதிமொழிகள்:22 :4

பிரியமானவர்களே,

ஆலயத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு அநேகர் சொல்லும் காரணங்கள் உண்மையிலேயே பொய்யான காரணங்கள் தான்.

அவர்கள் ஆலயத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு முதல் காரணம், தேவன் அவர்கள் வாழ்வில் முதன்மையானவராக இல்லை,

அல்லது அவர்கள் ஆலயத்திற்கு செல்வதற்கு வாஞ்சை இல்லாதவர்களாக இருப்பார்கள் என்பது தான் உண்மை.

ஆலயத்திற்கு செல்வது ஒரு விருப்பம் அல்லது, நமது இஷ்டப்படுகிற காரியம் இல்லை. அது கர்த்தரால் நமக்கு நியமிக்கப்பட்ட ஒன்று.

‘சபை கூடி வருதலைச் சிலர் விட்டு விடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக் கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்ல வேண்டும்’
எபிரேயர் :10:25 என்று பவுல் குறிப்பிடுகிறார்.

நீங்கள் ஆலயத்திற்கு செல்லாமல் இருக்கும் நாளில், கர்த்தருடைய சிறந்ததை, அதாவது அந்த நாளில் தேவன் உங்களுக்கென்று, உங்கள் ஜெபத்திற்கான பதிலை கொடுக்கும் நாளாக இருக்கலாம், நீங்கள் அன்று போகாததால் அதை இழந்து போக நேரிடும்.

கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசீர்வாதத்தை அந்த நாளில் வைத்திருக்கிறார். நாம், சுத்த இருதயத்தோடும், திறந்த மனதோடும் செல்லும்போது, அங்கு தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்கிறோம்.

தாவீது அரசராக இருந்த போதிலும், அவர் கூறுவதை பாருங்கள்.”ஆகாமிய கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்வேன்” என்று உலக கடமைகள், உலக இன்பங்கள் யாவற்றையும் விட்டு விட்டு தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் இருப்பதை தெரிந்து கொள்வேன் என்று கூறுகிறார்.

நீங்கள் ஆலயத்திற்கு செல்லும் போது, நீங்கள் கர்த்தரை தொழுது கொள்ளும் போது, உங்களை அறியாமல், ஆசீர்வாதத்தின் வல்லமைகளை பெற்றுக் கொள்கிறீர்கள்.

உங்களுடைய பிள்ளைகளுக்கு கர்த்தருடைய வீட்டிற்கு செல்வதின் அவசியத்தை போதிக்கிறீர்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் சுற்றி, தேவனுடைய பாதுகாப்பு என்னும் வேலிக்குள் அமைக்கப்படுகிறது .

திருச்சபைக்கு செல்லும் போது நிச்சயமாக நமக்கும் நம் குடும்பத்திற்கும் கர்த்தருடைய பாதுகாப்பு உண்டு. வியாதிகள், துர்செய்திகள், விபத்துகள் ஏற்படாதபடி, தேவனுடைய பிரசன்னம் நம்மை பாதுகாக்கிறது.

நாம் குடும்பமாக ஆலயத்திற்கு செல்வதனால், எத்தனை எத்தனையோ ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகிறோம்.

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன் என்ற வசனத்தின்படி மகிழ்ச்சியோடு ஆலயத்திற்கு செல்வோம்,

கர்த்தருடைய ஆசீர்வாதத்தை அளவில்லாமல் இந்த ஓய்வு நாளில் பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.

ஆமென்.

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God