Daily Manna 37

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப் போவான். யாக் 4:7.

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும், மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒருவர் நின்று அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிங்கம் இருந்த கூண்டுக்குள் அங்கு வேலை செய்கிற ஒரு மனிதன் தன் கையில் ஒரு துடைப்பத்துடன் (Broom) உள்ளே நுழைந்ததைப் பார்த்தார்.

அந்த மனிதன் அங்கு சுத்தம் பண்ண ஆரம்பித்தான். சிங்கம் இருந்த இடத்திற்கு வந்தவுடன் தன் கையில் உள்ள துடைப்பத்தால், அந்த சிங்கத்தை உசிப்பி விட்டவுடன், அந்த சிங்கம் அவனைப் பார்த்து ஒரு “புர்ர்ர்…” என்று உறுமி விட்டு, எழுந்து வேறிடத்தில் போய் படுத்துக் கொண்டது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர், ஓ, இந்த மனிதன் மிகவும் தைரியம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும், என்று எண்ணி, அந்த மனிதனிடம் போய், “நீர் மிகவும் தைரியமாக இருக்கிறீர், தைரியமாக உள்ளே நுழைந்து அந்த சிங்கத்தை உசிப்பி விட்டீரே, அந்த சிங்கம் உம்மேல் பாய்ந்து கடிக்கும் என்று பயமில்லையா?” என்றுக் கேட்டார்.

அதற்கு அந்த மனிதன் “இல்லை நான் தைரியமானவன் இல்லை” என்றுக் கூறினான். அப்போது அந்த மனிதர், “அப்படியானால் அந்த சிங்கம் நன்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்” என்றுக் கூறினார்.

அப்போது அந்த மனிதன், “நான் தைரியவானும் இல்லை, இந்த சிங்கம் பயிற்சி பெற்றதும் இல்லை, இந்த சிங்கம் வயதானது, அதற்கு பல்லு இல்லை. அதனால் ஒன்றும் செய்ய முடியாது” என்றுக் கூறி சிரித்தான்.

அப்படித் தான் நம் வாழ்விலும் பிசாசு வந்து சில வேளைகளில் பயமுறுத்திப் பார்க்கிறான். ஆனால் அவன் தலையை கிறிஸ்து இயேசு சிலுவையில் நசுக்கி விட்டார் .
அவன் தோற்றுப் போனவன்.

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான்.
யாக்கோபு. 5:8 என்றுப் பார்க்கிறோம்.

எந்த சிங்கமாவது விழுங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா ? சிங்கம் என்றால் கடித்துச் சாப்பிடுமே ஒழிய விழுங்காது. பிசாசானவன் விழுங்கலாமோ என்று சுற்றித் திரிகிறான்.

ஏனென்றால் ; அவன் பல் பிடுங்கப்பட்ட சிங்கம் அவன் தலையை நம் இயேசு கிறிஸ்து சிலுவையிலே நசுக்கி விட்டார் . அவன் கெர்ச்சித்து பயமுறுத்துவானே ஒழிய அவனால் ஒன்றும் செய்ய முடியாது.

எனவே நாம் ஆண்டவரின் வார்த்தைக்கு உண்மையாய் செவி கொடுக்கும் போது, எந்த ஒரு பயமுறுத்தலுக்கும் நாம் பயப்படவோ, கலங்கவோ வேண்டாம்.

வேதத்தில் பார்ப்போம்,

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான்.
1 பேதுரு:5 :8

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்.
எபேசியர்:6 :11

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப் போவான்.
யாக்கோபு:4:7

பிரியமானவர்களே!

பிசாசானவன் உங்கள் வாழ்க்கையில் கெர்சிக்கிற சிங்கத்தைப் போல பல வழிகளில் உங்களை பயமுறுத்தலாம், ஆனால் அதைக் கண்டு பயந்து விடாதீர்கள்.

உங்கள் வேலை இடத்தில், உங்கள் அனுதின வாழ்க்கையில், அவன் பல தந்திர வேலைகளைச் செய்யலாம். ஆனால் பயப்படாதிருங்கள். உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்.

நீங்கள் கர்த்தரை சார்ந்து ஜீவிப்பீர்களானால், உங்களுக்கு எதிராக கூட்டங் கூடினவர்கள் உங்கள் பட்சத்தில் வருவார்கள். தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்?

நீங்கள் வேலை செய்கிற இடங்களில், உண்மையாய் வேலை செய்யுங்கள், கடினமாய் உழையுங்கள். உங்கள் அதிகாரிகள் பார்க்க வேண்டும் என்று வேலை செய்யாமல் கர்த்தர் பார்க்கிறார் என்று உங்கள் கடமையை செய்யுங்கள். கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருப்பதைக் காண்பீர்கள்.

வேலையிடத்திலும், அதிகாரி காரணமில்லாமல் உங்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அவர்களுக்காக அவர்கள் பெயரைச் சொல்லி ஜெபியுங்கள் . கர்த்தர் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போடுவார்.

யாரை விழுங்கலாம் என்று வகை தேடித் திரிகிறவன் நமக்கு மிகவும் நெருங்கியவர்களை கொண்டே நமக்கு துன்பங்களையும் வேதனையும் கொடுப்பான்.

கர்த்தர் நம்மோடு பயங்கர பராக்கிரமசாலியாய், ஞானம் நிறைந்தவராய், எல்லாவற்றிலும் நம்மை வழி நடத்துகிறவராய் இருக்கும் போது, எந்த நாச மோசத்துக்கும் நாம் கலங்க தேவையில்லை.

நமக்கு விரோதமாய் எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார். கர்த்தர் நமக்கு வெற்றியைத் தருவார். அவரை மாத்திரம் விடாமல் பற்றிக் கொள்ளுவோம்.
நமக்கெதிராய் எழும்பும் எந்த ஆயதமும் வாங்காதே போகும்.

ஆம், அவரே நமக்காக யுத்தம் செய்கிறவர்.நமக்காக யாவற்றையும் செய்து முடிக்கிறவர். அந்த நல்ல ஆண்டவரின் கரத்துக்குள் அடைக்கலம் புகுவோம்.

கர்த்தர் தாமே ஒவ்வொரு நாளும் நமக்கு எந்த சேதமும் வராமல் நம்மை பாதுகாத்து வழிநடத்தி காப்பாராக.

ஆமென்.

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God