அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன். எரேமியா 33 :8
எனக்கு அன்பானவர்களே!
மன்னிப்பின் மகுடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் களவு செய்து கையும் களவுமாக பிடிப்பட்டார். நாளை காலை முகாமையாளர் அறைக்கு செல்ல வேண்டும்.
அங்கே அவருக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும் என்று சொன்னால் அவருடைய வேலை அங்கே பறிக்கப்படும் என்று எல்லோருக்கும் அது தெரியும்.
அடுத்த நாள் காலை முகாமையாளர் முன்பு கைகளை கட்டி நின்ற அந்த மனிதனிடம் “இந்த தவறை நீ செய்தாயா…? ‘ என்று கேட்டார் முகாமையாளர். அதற்கு அந்த மனிதர் ‘ஆம் நான் செய்தேன்…’ என்றார்.
‘இதற்கு என்ன தண்டனை என்று உனக்கு தெரியுமா..?’ என்று கேட்டார் முகாமையாளர். அதற்கு ஆம், ‘எனக்கு இந்த கம்பெனியில் வேலை இருக்காது என்று எனக்கு தெரியும் என்றார்.
மேலும் “நான் மன்னிக்கப்படாத குற்றம் செய்தேன்…’என் ‘இந்த தவறு மன்னிக்க கூடியதா…?’ என்று கேட்டார்.
முகாமையாளர் அவரைப் பார்த்து சொன்னார் ‘நான் உன்னை மன்னிக்கிறேன்…! இந்த நிறுவனத்தில் இவ்விதமாக மன்னிப்பட்ட இரண்டாவது நபர் நீதான்…
முதலாவது நபர் யார் தெரியுமா…? அது நான் தான்… நான் மன்னிக்கப்பட்டேன் ஆகவே மன்னிப்பின் விலை எனக்கு நன்கு தெரியும்..
மன்னிப்பின் மதிப்பு எனக்கு தெரியும்…
எனவே நான் உன்னை மன்னிக்றேன்…’ அந்த மனிதரின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைத்தரையாய் வந்தது.
‘சார் இனி நான் இந்த உலகத்தில் இருக்கின்ற வரைக்கும் எல்லாவிதத்திலும் உண்மையாகவே இருப்பேன்…’என்றான்
பிரியமானவர்களே, இதைத் தான் நம் இயேசு சொல்கிறார். மன்னிப்பை வெளிப்படுத்துவது மாத்திரம் அல்ல அவருடைய அடியார்களாகிய நாமும் கூட மன்னிக்கின்ற சிந்தையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
நான் உனக்கு இரங்கினது போல நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமோ? என்று சொல்லி
அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக் கொடுத்தான்.
நீங்கள் மற்றவர்களுக்கு மன்னிக்காவிட்டால் பரலோகத்தில் தேவன் உங்களுக்கு மன்னிக்க மாட்டார் என்று எழுதியுள்ளது. கிறிஸ்துவின் சுபாவம் நமக்குள்ளும்
வரட்டும்.
வேதத்தில் பார்ப்போம்,
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
எபேசியர் 4 :32.
நீங்கள் ஜெபம் பண்ணும் போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
மாற்கு 11:25.
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின் படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
எபேசியர் 1:7.
பிரியமானவர்களே,
இயேசு கிறிஸ்து மன்னிக்கிறவர். அவரின் மிகப்பெரிய தனித்தன்மை மன்னிப்பு.
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர்
மன்னியுங்கள்.
தேவன் உங்களை மன்னித்ததை போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்,
மன்னிப்பதில் வல்லவர் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து .
உலகத்திலேயே மிக கொடூரமான தண்டனை எது தெரியுமா? சிலுவை தண்டணை தான் என்று
ஜோசப் வாஸ் என்கிற எபிரேய வரலாற்று ஆசிரியர் இதனை விவரிக்கிறார்.
அந்த கொடிய வேதனையில் எந்தவொரு மனுஷனும் சபிப்பான். தம்மை கைது செய்தவனை சபிப்பான், தன்னை பிடித்தவர்களை சபிப்பான், ஆணி அடித்தவனை சபிப்பான், சிலுவை செய்தவனையும் சபித்துக் கொண்டேயிருப்பான்.
ஆனால் நம்முடைய இயேசுவோ அதை செய்யவில்லை.
அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். மத்தேயு 27:44 என்று வேதம் கூறுகிறது.
அவரோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளரும் மற்றவருடன் சேர்ந்து இயேசுவை நிந்தித்தார்கள்.
அப்பொழுது இயேசு:
‘பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாது இருக்கிறாகள் என்றார்!’
இது எப்படி முடிந்தது? அது தான் இயேசு கிறிஸ்து. அது தான் அவருடைய தனித்தன்மை. மன்னிப்பதில் சற்குணர் அவர்.
அவரின் பிள்ளைகளாகிய நாமும் பிறரை மன்னிக்கவும், மன்னிப்பின் பாதையில் பிறரை வழிநடத்தவும் வேண்டும் என நம் அருமை ஆண்டவர் விரும்புகிறார்.
அவரின் பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போலவே வாழ முயற்சிப்போம் .
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தருகிற ஆசீர்வாதங்களை இவ்வுலகில் பெற்று மற்றவர்களுக்கு மாதிரியாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.