Daily Manna 80

பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; ஏசாயா 54 :4

எனக்கு அன்பானவர்களே!

கைவிடாத கன்மலையாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒருவர் அரசாங்கத்தில் உயர் பதவியிலிருந்தார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பொழுது, கணிசமான ஒரு தொகை அவருக்குக் கிடைத்தது.

அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் ஒரு தொழில் அதிபர். “உன்னுடைய வருமானம் முழுவதையும் என்னிடத்தில் கொடுத்து விடு, வங்கியில் கிடைக்கும் வட்டியைவிட அதிகமான வட்டியை நான் உனக்குத் தருகிறேன்” என அவர் கூறினார் .

அவாரோ சந்தோஷமாக தனக்குக் கிடைத்த பணம் முழுவதையும் அவரிடம் கொடுத்து விட்டார். அவரிடம் ஒரு ரசீது கூட வாங்கிக் கொள்ளவில்லை. துரதிருஷ்டவசமாக ஒரே மாதத்தில் அவர் இறந்து போனார்.

அவருடைய மகனிடம் சென்று, “தம்பீ உன் அப்பாவிடம் இவ்வளவு பணம் கொடுத்தேன்” என்று கேட்டபோது, அவர், “அங்கிள் கணக்குப் புஸ்தகம் எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்து விட்டேன். நீங்கள் அப்படி கொடுத்ததாக ஒரு அத்தாட்சியும் இல்லையே என்று கூறி விட்டார்.

சோகத்துடன் வீட்டிற்கு வந்தார். அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள். அவர்கள் நான்கு பேரும் திருமணத்திற்காக காத்திருந்த நேரம் அது. அவரது உள்ளம் சுக்குநூறாக நொறுங்கியது. அவர் தடுமாறிப் போனார்.

அவருடைய மனைவி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை, அவர்கள் கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் தான் அவர்கள் தன் குடும்பத்தை ஓரளவு பராமரித்து வந்தார்கள்.

ஆனால் அவருடைய மனைவி ஆண்டவரை அதிகமாய் நம்புகிறவர்கள்! ஒவ்வொரு நாளும் ஆண்டவரிடம் கண்ணீரோடு மன்றாடி வந்தார்கள். மாத சம்பளம் வாங்கும் போதும், “ஆண்டவரே இவ்வளவு தான் என் கையில் இருக்கிறது, இதை ஏற்றுக் கொள்ளும். இந்த மாதம் முழுவதும் என் குடும்பத்தை நடத்தும்;

அற்புதமாக என் பிள்ளைகளுக்கும் திருமணத்தை முடித்துத் தாரும், எங்களைக் கைவிடாதிரும்” என்று கண்ணீரோடு கதறுவார்கள். அவர்களின் ஜெபத்தை கேட்ட கர்த்தர், அவர்களைக் கைவிடவேயில்லை.

அந்த நான்கு பிள்ளைகளையும், உயர்ந்த பதவியில் இருந்த நான்கு வரன்கள், “எங்களுக்கு ஒரு பைசா கூட வரதட்சணை வேண்டாம்” என்று கூறி, திருமணம் செய்து கொள்ள முன் வந்தார்கள், நான்கு பேருக்கும் திருமணம் சிறப்பாக முடிந்தது. எவ்வித கடனும் இல்லாதபடி ஆச்சரியவிதமாக திருமணம் நடைபெற்றது.

அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை அன்பான இயேசு கிறிஸ்து அமைத்துக் கொடுத்தார். ஆம் அவரை நோக்கி பார்த்த முகங்கள் பிரகாசம் அடைந்தன,என்ற வேத வாக்கியம் நிறைவேறிற்று.

வேதத்தில் பார்ப்போம்,

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
ஏசாயா 41 :10.

ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே , கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்;
எரேமியா 30 :30.

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
ஏசாயா 41 :13.

பிரியமானவர்களே,

உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் பலவிதமான சோதனை காலங்களில் நீங்கள் பயணம் செய்யும் போது, “ஆண்டவர் உங்களோடு இருக்கிறார்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஆம் உங்களைக் கைவிடாமல் காப்பாற்றுவதற்கு ஆண்டவர் உங்களுடனே கூட என்றென்றும் இருக்கின்றார்.

ஒரே நாளில் தனது எல்லா குழந்தைகளையும் சொத்துக்களையும் இழந்த யோபு, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” யோபு 19:25 என்று கூறுகிறார்.

வானத்தை தமது கரங்களால் விரித்த ஜீவனுள்ள தேவனுடைய அன்பான கரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

இந்த உலகம் நொறுங்கிப் போவதாக நீங்கள் உணரும்போது, பிரபஞ்சத்தின் பாதுகாப்பான இடமாகிய, தேவகரத்தில் உங்களை அர்ப்பணியுங்கள்.

மனிதனிடம் ஓடுவதற்கு பதிலாக, தேவனுடைய வாக்குறுதிகளை நம்பி அவரை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அவர் உங்கள் பிரச்சினைகள் யாவற்றிலிருந்தும் விடுவித்து மகிமையான வழியில் உங்களை வெளிக் கொண்டு வருவார்.

நம்முடைய பயத்தை நீக்குகிறவர் இயேசுகிறிஸ்து மட்டுமே. அந்த பயத்தை சந்தோஷமாக மாற்றுகிறார் எப்படி? ‘இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் மத்.28:20. என்று
நமக்கு வாக்கு கொடுக்கிறார்.

“நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று சொன்ன இயேசு, இந்த நாட்களில் உங்கள் முன்னே போவார், அவர் உங்களோடு கூட இருப்பார்.

யாக்கோபு தவித்த வேளையில் கைவிடாதவர், யோசுவா கலங்கின போது அவனோடிருந்து நடத்தின அதே ஆண்டவர் நம் வாழ்நாள் முழுவதிலும் நம்மோடிருந்து நம்மையும் நம் குடும்பங்களையும் காப்பார்.நம் தேவைகளை சந்திப்பார்.

இப்படிப்பட்ட நல்ல ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவை இந்த தபசு நாட்களில் இன்னும் உறுதியாய் பற்றிக் கொள்வோம். வளமாய் வாழுவோம்.
ஆமென்.

Similar Posts

  • You see that faith is made perfect by works

    You see that faith is made perfect by works விசுவாசம் அவனுடைய கிரியைகளோடே கூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. யாக்கோபு 2 :22. ========================= எனக்கு அன்பானவர்களே! நம் முயற்சிகளை வாய்க்க செய்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருநாள் விவசாயி ஒருவன் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி, மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க…

  • Daily Manna 6

    நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப் பண்ணலாம்; நீதிமொழிகள்:25 :15 எனக்கு அன்பானவர்களே! நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள். எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நான் பார்க்க வேண்டும் என்றார் தந்தை. மறுநாள்,…

  • Daily Manna 63

    அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. லூக்கா 22:44 எனக்கு அன்பானவர்களே! சிலுவைமரணம் மிக மிகக் கொடியது. சிலுவையில் அறையப்படும் மனிதன் உடனடியாக மரிப்பதில்லை. பல நாட்கள் கூட சிலுவையில் தொங்கி தாங்கமுடியாத வேதனைகளை அனுபவித்து மரிப்பார்கள் . மேலும் சிலுவையில் தொங்கும் மனிதன் வேதனை தாங்க முடியாமல், சிலுவையில் அறைந்தவர்களை சபிப்பார்கள். தூஷண வார்த்தைகளால் திட்டுவார்கள், வேதனையின் அகோரத்தினால்சப்தமிடுவார்கள். ஆனால் நம் இயேசுவோ, சிலுவையில் மிக…

  • Daily Manna 24

    இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். சங்:127:4 அன்பானவர்களே! ஒரு தம்பதியினர் அநேக வருடங்களாக பிள்ளைகள் இல்லாததால் ஒரு பிள்ளையை எடுத்து வளர்ப்பதற்குத் தீர்மானம் பண்ணி, குழந்தை ஒன்றைத் தேட ஆரம்பித்தனர். மனதுக்குப் பிடித்த மாதிரி குழந்தை அமையாததால், பின்னர் பார்ப்போம் என்று சற்றுக் காலதாமதம் செய்தனர். அச்சமயத்தில் அந்த மனைவி தன் மனதை மாற்றிக் கொண்டு, குழந்தையை நான் தத்தெடுக்கவில்லை. தேவனுக்குச் சித்தமானால் நமக்கு ஒரு குழந்தையைத் தரட்டும்…

  • Daily Manna 75

    மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மத்தேயு 6 :14 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு பெண்மணி புற்று நோயினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் அதிகபட்சம் ஆறு மாதங்களே உயிரோடிருப்பாள் என மருத்துவர்கள் கூறி விட்டனர். ஒரு நாள் மருத்துவர்கள் தனக்கு சொன்ன முடிவை தனது 12, மற்றும்14 வயது மகன்களிடம தெரிவித்தாள். உடனே மூத்தவன்…

  • Daily Manna -2

    கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்;ஏசாயா 11:3. எனக்கு அன்பானவர்களே! கர்த்தருக்கு பயப்படும் பயத்தை நமக்கு போதிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பென்னிகின் என்கிற ஒரு தேவ மனிதர்ஒரு முறை அவர் தன்னுடைய கன்வென்ஷன் கூட்டத்திற்கு செல்வதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தாராம். இப்படியாக அவர் ஆயத்தமாகி கொண்டிருந்த வேளையில் திடீரென அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அனேக நாட்களுக்குப் பின்பு அவரைத் தேடி வந்துவிட்டார். அவரைப் பார்த்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *