God Will Give You Wisdom

 

அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார்.
யாத் 35 :33.

எனக்கு அன்பானவர்களே!

புதிய ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்புகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பல வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தில் வசிக்கும் ஒரு சகோதரியின் சாட்சியைப் பற்றி அறிந்திருப்போம்.

அந்த சகோதரி கேன்சர் நோயினால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்கள். யாரோ ஒருவர் அவர்களிடம், சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள் இந்த வழியாக ரயிலில் கடந்து செல்லவிருக்கிறார்.

எனவே ரயில் நிற்கும் அந்த சில நிமிடங்களில் அவரை பார்த்து ஜெபிக்க வேண்டிக் கொள் என கூறினார். ரயில் வந்து நின்றதும், அவள் சென்று ஜெபிக்க வேண்டிக் கொண்டாள்.

சில நிமிடங்கள் ஊழியர் மிகுந்த பாரத்தோடு அந்த பெண்ணுக்காக ஜெபிக்கும் போது, மின்சாரம் போன்ற வல்லமை அந்த சகோதரியைத் தாக்கியதில், அவர்கள் அப்பொழுதே பூரண சுகமடைந்தாள்.

பரிசுத்த ஆவியானவர் அந்த பெண்ணுக்கு மட்டும் விடுதலை கொடுக்கவில்லை .
அவள் குடும்பத்திற்கே விடுதலையான ஒரு சிறந்த வாழ்வைக் கொடுத்தார்.

அப்பெண்ணின் மகன் பஃரைன் தேசத்திலே ஒரு கம்பெனியில் நேர் காணலுக்காக அழைக்கப்பட்டிருந்தான். அவன் இந்தியாவில் 12ம் வகுப்பு வரை தான் படித்திருந்தான். ஆனால் அவன் நேர்காணலுக்கு சென்ற கம்பெனியிலோ அவனை நிர்வாகியாக தேர்வு செய்தனர்.

பிற்பாடு அவன் சொந்தமாக ஒரு கம்பெனி ஒன்றை துவங்கினான். இவ்விதமாக ஆண்டவர் அவர்களை நேசித்து உயர்த்தினார்.

தான் படித்த படிப்பு குறைவாக இருந்தாலும், தேவ ஆவியானவர் தம்முடைய ஞானத்தினால் நிரப்பி நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான உயர்த்தினார்.

ஆதி 41:38-ல் யோசேப்பைக் குறித்து, பார்வோன் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ? என்று சாட்சி கூறுகிறான்.

“தானியேலுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது” தானியேல் 5:11 என்று ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் ராஜாத்தி தானியேலைக் குறித்து ராஜாவிடம் கூறினாள் என்று வேதம் கூறுகிறது.

இந்த பரிசுத்த ஆவியை நீங்களும் பெற்றுக் கொள்வீர்களானால், தேவனுடைய பார்வையிலும், மனுஷ பார்வையிலும் உங்களுக்கு தயை கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். தேவன் தாமே உங்கள் மீது தயையும் இரக்கத்தையும் கிருபையும் என்றென்றும் வைத்து உங்களை ஆசீர்வதிப்பார்!

வேதத்தில் பார்ப்போம்,

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
நீதி 2 :6.
ஞானத்தைப் பெற்றுக் கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
நீதி 19 :8.
அப்படியே ஞானத்தை அறிந்து கொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக் கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண் போகாது.
நீதி 24 :14.

பிரியமானவர்களே,

கிருபையும் மனதுருக்கமும் சத்தியமும் நமக்குள் இருந்தால் ஜாதி, இனம்,மதம் வேறுபாடின்றி எங்கும் நீங்கள் தயை பெறுவீர்கள்.

தேவனுடைய ஆவி நமக்குள் இருக்குமானால், நாம் ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்குவோம்

ஆவியானவரின் வல்லமை உங்களுக்குள் இறங்கும் போது, உங்களுடைய ஆவி ஆத்துமா சரீரத்தில் நீங்கள் சுகத்தையும் புத்துணர்வையும் பெற்றுக் கொள்வீர்கள்.

என்னைக் கண்டடைகிறவர் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.” நீதி 8:35. இன்றைக்கும் சுகமாகாத வியாதியினால் வேதனைப்படுகிறீர்களா?

மனுஷ கண்களிலும், தேவனுடைய கண்களிலும் தயை கிடைக்காமல் தவிக்கிறீர்களா? இன்றைக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு சுகத்தை தரவல்லவர் என்பதை விசுவாசித்து அவரை கண்டடையுங்கள்.

அவர் உங்களை தேவ ஆவியினால் நிரப்புவார். தேவ ஆவியானவர் உங்களை பூரணமாக சுகமாக்கி புதிய ஜீவனை உங்களுக்கு கட்டளையிடுவார்.

நீங்கள் அவருடைய பிள்ளைகளாயிருக்கிறபடியால் அவர் உங்களுக்கு தயையும் நற்புத்தியையும் தந்து உங்களை உயர்த்துவார்.

இன்றைக்கு உங்கள் மீது ஆசீர்வாத மழை பொழிவதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் இந்த நாளின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வீர்கள்.

இந்த புதிய மாதத்தில் புதிய ஆசீர்வாதங்களையும், தேவ ஞானத்தையும், தேவ தயவையும் பெற்று ஆரோக்கியமாக வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.

ஆமென்.

Similar Posts

  • Daily Manna 81

    உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம். சங்கீதம் 119:97 எனக்கு அன்பானவர்களே! கல்வாரி நாதராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். தவக்காலம் என்றால்,சுருங்கக் கூறின் எம் ஆன்மாவின் ஏற்றத்திற்காக ஆண்டவரால் வழங்கப்பட்ட அருமையான காலமேயாகும். ஆண்டவரின் விருப்பத்தை வாழ்வில் ஏற்று அதன் படி வாழ்ந்து கடவுளோடும் மனிதரோடும் ஒப்புரவாவதற்கான காலமே தவக்காலமாகும். நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை எம் ஆன்மீகத் தேடலை வழிப்படுத்தி,…

  • Daily Manna 221

    நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். மத்தேயு: 7 :1. எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் ஒரு மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒரு முறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும்…

  • Daily Manna 65

    மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதி முன் வாருங்கள். சங்கீதம் 100:2 எனக்கு அன்பானவர்களே! ஆராதனையின் நாயகராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நம்மில் அனேகர் இன்று ஞாயிற்றுக் கிழமையா? ஆராதனையில் நான் தவறாமல் சர்ச்சுக்கு போய் விடுவேன்” என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறோம். ஆனால், சர்ச்சுக்குப் போனதும் பைபிளை வாசிப்பதைக் கவனமாக கேட்கிறோமா? அல்லது பிரசங்கத்திற்கு செவிமடுக்கிறோமா? அங்கே, ஆராதனை நடந்து கொண்டிருக்க, நாம்…

  • Daily Manna 18

    கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், சங்கீதம்:138 :6 எனக்கு அன்பானவர்களே! நாம் தாழ்மையில் இருக்கும் போது, நம்மை நினைத்தருளி, நமக்கு உயர்வை தருகின்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். தாழ்மை, தவறுக்கு மனம் வருந்துதல் போன்ற நற்குணங்கள் உள்ளவர்களை இவ்வுலகில் பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் வேதத்தில் இவ்விரண்டு குணங்களையும் உடைய ஒருவரைப் பற்றி இன்றைய தினத்தில் தியானிப்போம். சவுல், தாவீது இந்த இரண்டு பேர்களையும் எடுத்துக்…

  • There is definitely peace and happiness in our lives

    There is definitely peace and happiness in our lives உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். லூக்கா 2:14 . ~~~~~~~ எனக்கு அன்பானவர்களே, சமாதான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். கிறிஸ்துமஸ் என்றாலே பரலோகத்தில் ( Heaven) மகிழ்ச்சி. பூலோகத்தில் ( Earth) சமாதானம் என்பதாகும். கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை…

  • Daily Manna 120

    பூரண ரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம். ஏசாயா: 33 :6. எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பண்டையக் காலங்களில் தங்கள் பொக்கிஷங்களை நிலத்திற்குள் புதைத்து வைப்பது வழக்கம். அக்காலத்தில் திருடு, கொள்ளை அதிகமாகக் காணப்பட்டது. ஆட்சி அதிகாரம் மாறுகிற சமயங்களிலெல்லாம், பெரும் செல்வந்தர்களின் வீடு புகுந்து, சூரையாடுகிற அபாயமும் அந்நாட்களில் காணப்பட்டது. அதனால் தான், செல்வந்தர்கள் தங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *