Daily Manna 73
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். சங்கீதம் 91:11 எனக்கு அன்பானவர்களே! நம்மை பாதுகாத்து வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஆப்பிரிக்கா தேசத்தின் இரட்சிப்புக்காகத் தன்னை அர்ப்பணித்த தேவமனிதனாகிய டேவிட் லிவிங்ஸ்டனை, கொலை செய்வதற்காகச் சிலர் துப்பாக்கிகளோடு இவர் இல்லம் தேடி வந்த போது, அவர் தேவனோடு உறவாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக ஒரு விஷ நாகபாம்பு படம் எடுத்துக் கொண்டிருந்தது….