The LORD is your life

The LORD is your life

உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக் கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.
உபாகமம் 30:20.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எனக்கு அன்பானவர்களே,

சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரும், நீண்ட ஆயுசுள்ளவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இசையுலகில் கால்தடம் பதித்த மைக்கேல் ஜாக்சனை பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது என்று கூறலாம்.

இவர் 150 ஆண்டுகள் வாழ விரும்பினார். அதற்காக தன் வீட்டில் 12 மருத்துவர்களை நியமித்தார், அவர்கள் தினமும் முடி முதல் கால் நகங்கள் வரை பரிசோதிப்பார்கள். உண்பதற்கு முன்பு அவரது உணவு எப்போதும் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது.

அவரது தினசரி உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியைக் கவனிக்க மேலும் 15 பேர் நியமிக்கப்பட்டனர். அவரது படுக்கையில் ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இருந்தது.

அவருக்கு உறுப்பு தானம் செய்ய நன்கொடையாளர்கள் தயாராக இருந்தனர்.. இதனால் அவருக்கு தேவைப்படும் போது உடனடியாக தங்கள் உறுப்பை தானம் செய்யலாம். இந்த நன்கொடையாளர்களின் பராமரிப்பையும் அவர் கவனித்துக் கொண்டார்.

அவர் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்தார்.ஆனால்
வெறும் 50 ஆண்டுகள் தான் வாழ்ந்தார்.

25 ஜூன் 2009 அன்று, தனது 50 வயதில், அவரது இதயம் செயல்படுவதை நிறுத்தியது. அந்த 12 மருத்துவர்களின் நிலையான முயற்சி பலனளிக்கவில்லை.

கூட, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஒருபோதும் ஒரு அடி கூட முன்னேறாத நபர், 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற அவரது கனவை நிறைவேற்ற முடியவில்லை.

ஜாக்சனின் இறுதி பயணத்தை 2.5 மில்லியன் மக்கள் நேரடியாகப் பார்த்தார்கள், இது இன்று வரை மிக நீண்ட நேர ஒளிபரப்பு.

அவர் இறந்த நாளில், அதாவது. 25 ஜூன் ’09 பிற்பகல் 3.15 மணிக்கு, விக்கிபீடியா, ட்விட்டர், இன் உடனடி தூதர் வேலை செய்வதை நிறுத்தினார். கூகூளில் மைக்கேல் ஜாக்சனை மில்லியன் கணக்கான மக்கள் ஒன்றாகத் தேடினர்.

ஜாக்சன் தன் மரணத்தை சவால் விட்டு ஜெயிக்க முயன்றார். ஆனால் மரணமோ அவருக்கு சவால் விட்டு ஜெயித்தது.

வேதத்தில் பார்ப்போம்,

நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி,
உபாகமம்:6 :1.

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக
உபாக:5 :16.

ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
யோபு:14 :1

பிரியமானவர்களே,

மைக்கேல் ஜாக்சன் 150 வயது வரை வாழ விரும்பி ,
அதற்கென்று ஏதோ முயற்சிகள் எல்லாம் செய்து பார்த்தார் . ஆனால் அவர் விரும்பினது ஒன்றும் நடக்காமல் போய் விட்டது.

என்ன தான் விஞ்ஞான அறிவில் மனிதர்கள் விண்ணை எட்டியிருந்தாலும், வியாதியை வெல்ல முடியவில்லை, அல்லது சாவை, ஒருவருடைய சாவையாவது முறியடிக்க முடியவில்லை.

ஆனால் வேதம் கூறுகிறது, “கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப்
பெருகப் பண்ணும்: துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப் போம்”.
நீதி 10 :27 என்று

சங்கீதகாரன் தாவீதை சொல்லுகிறார்.என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு,

உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார், கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது. சங்கீதம் 103 :1&5 என்று பார்க்கிறோம்.

வேதத்தில் நாம் பார்க்கும் போது, மிக அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்தவர் என்று மெத்துசாலா என்பவர் மட்டுமே இருந்தார். இவர் 969 வருசங்கள் வாழ்ந்தவர் என்று வேதம் கூறுகிறது. அது அப்படியே குறைந்து கடைசியாக யோசுவா 110 வருசங்கள் வாழ்ந்தார். இன்றைய காலகட்டத்தில் 60, 70, 80, வயதில் இறந்து விடுகிறார்கள்.

இதுவும் கூட மாயை என்று வேதம் சொல்லுகிறது. இந்த உலக வாழ்க்கை தற்காலிகமானது. நிலையற்றது.
துன்பங்கள் மிகுந்தது.

ஆனால் நம்முடைய நித்திய வாழ்க்கையோ பரலோகத்தில் இருக்கிறது. அங்கே அழுகையும் இல்லை, புலம்பலும் இல்லை.

ஆம், நீண்ட ஆயுசுள்ளவரே நம்மை வழி நடத்துவார் என்று வேதம் கூறுகிறது.
அவருடைய ராஜ்ஜியத்திற்கு முடிவிராது‌. “அவரோடே கூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்”
2 தீமோத்தேயு 2:11 என்று வேதத்தில் பார்க்கிறோம்.

ஆம் பிரியமானவர்களே,
கர்த்தருக்கு பயந்து, அவரின் கட்டளைகளை கைக் கொள்ளும் போது இவ்வுலக வாழ்வில் மட்டுமல்ல, விண்ணுலகத்திலும் அவரோடு கூட நித்திய காலமாக, யுகயுகமாய் வாழுவோம் என்பதில் ஐயமில்லை.

இந்த நித்திய மகிழ்ச்சியை நம் யாவரும் பெற்று அனுபவிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *