Daily Manna 174

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். மத்தேயு: 6 :34.

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்.
மத்தேயு: 6 :34.
———————————————
எனக்கு அன்பானவர்களே!

நிலையான வாழ்வை தரும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒருவன் தன் வேலையில் இடமாற்றம் காரணமாக, இருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு வேறு ஊருக்குப் போக வேண்டிய நிலை ஏற்பட்டது.அந்த ஊருக்குப் போக வேண்டுமானால், வழியில் உள்ள ஒரு பெரிய ஆற்றைக் கடந்தாக வேண்டும்.

ஆறு நிறைய தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு,ஒரு படகை வாடகைக்குப் பேசி ஏற்பாடு செய்து கொண்டான்.வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் படகில் ஏற்றினான்.

மனைவி, மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் ஏறி அமர்ந்து கொண்டான்.
படகு ஆற்றில் சிறிது தூரம் சென்றவுடன், ஆடத் தொடங்கியது.படகில், அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றியதன் காரணமாக,படகு,
மெல்ல மெல்ல ஆற்றில் அமிழத் தொடங்கியது.

ஆற்றுநீர் கொஞ்சம் கொஞ்சமாக படகின் உள்ளே வரத் தொடங்கியது. நிலைமையின் ஆபத்தைப் புரிந்து கொண்ட அவன்,விரைந்து செயலாற்றத் தொடங்கினான்.

பாரத்தைக் குறைப்பதற்காக, ஒவ்வொரு பொருளாக எடுத்து ஆற்றில் வீசினான்.இவ்வாறு கட்டில்,பீரோ,
கிரைண்டர்,மிக்சி,
குளிர் சாதனப் பெட்டி என்று ஒவ்வொன்றாக ஆற்றிலே தள்ளி விட்டான்.ஓரளவு பாரம் குறைந்தவுடன்,படகு, மெல்ல மெல்ல மேலே எழும்பி வந்தது.படகில் நீர் நுழைவதும் நின்று விட்டது.

படகு பாதுகாப்பாக மறுகரையை வந்து அடைந்தது.
கவலையுடன் இருந்த மனைவியைப் பார்த்துக் கணவன் சொன்னான்,
“கவலைப்படாதே, இந்தப் பொருட்கள் எல்லாம், நம்மை விட்டுப் போகாதிருந்தால், நம்முடைய உயிர்,நம்மை விட்டுப் போயிருக்கும்.

நம்முடைய அருமைக் குழந்தைகளையும், நாம் இழந்திருப்போம். நம்மை விட்டுப் போன இப்பொருட்களை எல்லாம், நாம் திரும்பப் பெற முடியும். ஆகையால் நீ கவலைப்படாதே”- என்று ஆறுதல் கூறினான்.

அவன் மனைவி,கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க,அப்படியே தன் கணவன் மீது சாய்ந்து கொண்டாள்.

வேதம் சொல்லுகிறது
1 யோவான் 5:5 – ல் இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
விசுவாசிக்கிறவன் பதறான் என்று.

ஆம் விசுவாசிக்கிறவர்கள் பதறாமல் மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை கர்த்தரின் கிருபையால் செய்து முடிப்பர்.

வேதத்தில் பார்ப்போம்,

எனக்குச் செவி கொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.
நீதிமொழிகள்:1:33.

துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
சங்கீதம்: 112:7.

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
ஏசாயா :41:13.

பிரியமானவர்களே,

நாம் எவ்வளவு தான் பொருள்களை திரட்டினாலும் அது உண்மையில் நம்முடையது அல்ல. பல கோடிகளுக்கு அதிபதியாக இருப்பவர் அனைத்தையும் சாப்பிட முடியாது. அனைத்தையும் அனுபவித்து விடவும் முடியாது.

ஒரு அந்தஸ்து இதனால் கிடைக்குமே தவிர அனைத்தையும் யாராலும் அனுபவிக்க ஒரு போதும் முடியாது. அளவுக்கு அதிகமான பொருட்களையோ,
பணத்தையோ வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்.

இதை உணர்ந்து கொண்டால் பொருளாதாரத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது நமக்கு எளிதாகி விடும்.

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்”
என்பது குறள்.341. ஒருவன்,எந்தெந்தப் பொருட்களிடம் பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருட்களினால், அவனுக்குத் துன்பம் இல்லை என்பது இக்குறளின் பொருள்.

உலக ஆசை இல்லாமல் இருப்பதும், எளிமையாக இருப்பதும் இந்த உலகத்தில் நமக்கு எதுவும் சொந்தம் கிடையாது என்ற மனப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் பேராசைப்பட மாட்டோம்.

என்ன தான் பணத்தைத் திரட்டினாலும் மரணம் வந்து விட்டால் நாம் அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டுப் போய் விட வேண்டும் என்று புரிந்து கொண்டால் பேரசையை நாம் ஒழிக்க முடியும்.

பிரியமானவர்களே,
நம்முடைய இருதயத்தின் ஆசை என்ன? நம்முடைய உள்ளம் எதை வாஞ்சிக்கிறது. நம்முடைய பேச்சுக்கள் செயல்கள் எல்லாம் உலகத்தை குறித்ததா? இல்லை கிறிஸ்துவை குறித்ததா? சற்று சிந்தித்துப் பார்போம்?

வேதம் கூறுகிறது உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். உலகத்திற்கும் தேவனுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது.

நம்முடைய விருப்பம் ஆசை எல்லாம் இயேசுவாக இருக்கட்டும். நிலையற்ற உலக பொருட்கள் மேல் கொண்ட ஆசை நம்பிக்கையை விட்டு விட்டு நிலையான நித்திய ஜீவனை தரும் இயேசுவை பற்றிக் கொள்ளுவோம்.

நித்திய பிதாவின் மகிமையில் பிரவேசித்து என்றென்றுமாய் நிலைத்து வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God