Daily Manna 175

இயேசு அதைக் கண்டு விசனமடைந்து சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங் கொடுங்கள்; மாற்கு:10:14.

இயேசு அதைக் கண்டு விசனமடைந்து சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங் கொடுங்கள்;
மாற்கு:10:14.
========================
எனக்கு அன்பானவர்களே!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ப்ரூஸ்ரிட்டர் என்பவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் குருவாக {போதகராக} இருந்தார். ஒருநாள் நள்ளிரவில் அவர் வசிக்கும் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தார்.

அப்போது ஒரு சிறுவனும், சிறுமியும் பரிதாபமான கோலத்தில் நின்றார்கள். நள்ளிரவு நேரம் என்பதால், அவர்களிடம் பெரிதாக எதுவும் பேசாமல் தங்குவதற்கு இடமளித்து விட்டு அவர் தூங்கச் சென்று விட்டார்.

மறுநாள் காலையில் அவர் கண் விழித்துப் பார்த்த போது, அங்குள்ள அறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டார். அதுமட்டுமல்லாமல், அவருக்கான காலை உணவும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.

இவை எல்லாவற்றையும் பார்த்து ஆச்சர்யப்பட்ட ப்ரூஸ்ரிட்டர், அந்த சிறுவனையும் சிறுமியையும் அழைத்து, `நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், ஏன் இப்படி நள்ளிரவில் தனியாக வந்தீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், `நாங்கள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள். எங்களது பெற்றோர் எங்களை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்கள்’ என்று சொல்லி கண்ணீர் விட்டு அழத் தொடங்கி விட்டனர். அவர்களது நிலைமையைப் புரிந்து கொண்ட ப்ரூஸ்ரிட்டர் என்ற அந்த குருவானவர்,அந்தக் குழந்தைகளிடம், “நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இங்கே தங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான் எல்லா வசதிகளையும் செய்து தருகிறேன்” என்று சொன்னார்.

இதைக் கேட்டு அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அங்கே தங்கினார்கள்.
இதற்கிடையே சிலர் ப்ரூஸ்ரிட்டரிடம், “முன் பின் தெரியாத குழந்தைகளை உங்களோடு வைத்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. இது பிற்காலத்தில் பெரிய பிரச்னையில் கொண்டு போய் விட்டு விடும். அதனால் அவர்களை துரத்தி விடுங்கள்” என்று கூறினார்கள்.

ஆனால் அவர்கள் சொல்வது எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் அந்தக் குழந்தைகளைத் தன்னுடன் வைத்துப் பராமரித்து வந்தார். சில நாள்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு யோசனை வந்தது. `நாம் ஏன் பெற்றோரால் துரத்தப்பட்ட இது போன்ற குழந்தைகளுக்காக ஓர் இல்லம் தொடங்கக் கூடாது…’ என்பதே அவரது யோசனை.

உடனே, அவர் தன்னுடன் இருந்த அந்த இரண்டு குழந்தைகளையும் கொண்டு `உடன்படிக்கையின் இல்லம்’ என்ற ஒரு இல்லத்தை அமைத்தார்.

ஊர் மக்கள் சொன்னதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் ஏழைகள், கைவிடப்பட்ட மற்றும் அநாதைக் குழந்தைகளுக்காக அவர் ஏற்படுத்திய இல்லத்தில் ஏராளமான குழந்தைகள் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள்.

இது வரலாற்று நிகழ்வு. இங்கே வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வையும் நாம் உற்று நோக்க வேண்டியிருக்கிறது.

வேதத்தில் பார்ப்போம்,

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
சங்கீதம் :127 :4

பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்
கொலோசேயர்: 3: 21

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
சங்கீதம்:127 :4.

பிரியமானவர்களே,

இயேசு கிறிஸ்து சிறு பிள்ளைகளை தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு ஆசி வழங்குகிறார். ஆனால், இயேசுவின் சீடர்களோ, குழந்தைகள் மீது அவருக்குள்ள அன்பினைப் புரிந்து கொள்ளாமல் அவரிடம் குழந்தைகளைக் கொண்டு வந்த பெற்றோரைத் தடுக்கின்றார்கள்.

இதைக் கண்ட இயேசு சீடர்களைக் கடிந்தபடி தன்னிடம் அழைத்து வரப்பட்ட குழந்தைகளைக் கூப்பிட்டு, அவர்களை ஆசீர்வதிக்கிறார். இந்த நிகழ்வு நமக்கு ஒரு சில உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளைப் பெரியவர்கள் ஆசீர்வதிக்கும் பழக்கம் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. யாக்கோபு, யோசேப்பின் இரு புதல்வர்களான மனாசேயையும் எப்ராயிமையும் ஆசீர்வதித்ததாக வேதம் நமக்குச் சான்று பகர்கிறது.

இந்தப் பின்னணியில் தான் தங்களது குழந்தைகளை இயேசு ஆசீர்வதிக்க வேண்டும் என்று அதன் பெற்றோர் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். இயேசுவும் அந்தக் குழந்தைகளை ஆசீர்வதிக்க முன் வருகின்றார்.

ஆனால், சீடர்கள் இயேசுவைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு, குழந்தைகளின் பெற்றோரைத் தடுக்கிறார்கள். அதனால் இயேசு சீடர்களைக் கடிந்து கொள்கின்றார்.

இந்த நிகழ்வின் கடைசியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தனது சீடர்களைப் பார்த்து, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்க வேண்டாம்.

ஏனெனில் பரலோக ராஜ்யம் இத்தகையோருக்கே உரியது” என்று கூறுகிறார். இதை நாம் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டும்.

‘இயேசு குழந்தைகளைத் தன்னிடம் அழைப்பதற்குக் காரணம் அவர்கள் இயேசுவிடமிருந்து ஏராளமானவற்றைக் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கே’ என்று மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இயேசு கூறுவதுபோல கனிவும் மனத்தாழ்மையும் உடையவரான அவரிடம் குழந்தைகள் செல்லும்போது அவரிடத்தில் உள்ள அந்தப் பண்புகளை கற்றுக் கொள்ளலாம் என்பது உறுதி.

மேலும், ‘குழந்தையின் உள்ளத்தை யாரெல்லாம் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே உரியது விண்ணரசு’ என்பதை ஆண்டவராகிய இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

ஆகவே, நாமெல்லாம் குழந்தைகளின் உள்ளம் கொண்டவர்களாக வாழ்வோம். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல், அவர்களின் வளர்ச்சிக்கும் காரணமாக இருப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நம்மை விண்ணரசுக்கு தகுதிப்படுத்துவாராக
ஆமென்

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God