Daily Manna 46

பின்பு, அவர் {இயேசு} சீஷர்களிடத்தில் வந்து, நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக் கூடாதா? மத்தேயு 26:40

எனக்கு அன்பானவர்களே!

இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

சரீர ஓய்வுக்கு நித்திரை அவசியமாயினும், அதிக தூக்கம் அதிக களைப்பைக் கொடுக்கும் என்பதும் உண்மை. இயந்திரம் போல ஓய்வின்றி உழைக்கின்ற ஒருவன், வீடு திரும்பியதும் தூங்கி இளைப்பாறுவான். இது இயல்பு.

ஆனால், இன்று இரவிலும் விழித்திருந்து பல காரியங்களில் ஈடுபடுகிறவர்கள் அநேகர். குழந்தைகள் முதற்தொட்டு பெரியவர்கள் வரையும், இரவு மிகவும் பிந்தித் தான் படுக்கைக்குப் போகிறார்கள்.

அதனால், விடிய விடிய தூக்கம். பின்னர் அவசர அவசரமாக எழுந்து வேலைக்கு ஓடுவது என்பதெல்லாம் சாதாரண நிகழ்வாகி விட்டது. இப்படியிருக்க, நேரத்தோடு எழுந்து, தேவபாதம் அமருவது என்பது உண்மையாகவே கடினம் தான்.

அதனால் அவசர ஜெபம், அவசர வேதவாசிப்பு என்று எல்லாம் அவசரமாகி விட்டது. இந்த அவசரத்தில் ஆண்டவரோடு விழித்திருப்பது எப்படி? அடுத்தது நேரம்; இன்று ஒவ்வொரு விநாடியும் பெறு மதிப்புமிக்கது. அப்படியிருக்க, ஒரு மணிநேரம் ஓரிடத்தில் இருப்பது என்பது இலேசான காரியமா?

ஆனால், நேரத்தை ஒதுக்காவிட்டால், நாம் ஆண்டவரோடு தனித்திருப்பது எப்படி? தனித்திருத்தல், விழித்திருத்தல் என்பது முக்கியம் தானா?

கெத்செமனே தோட்டத்தில் ஆண்டவர் துக்கமும் வியாகுலமும் நிறைந்த ஆத்துமாவுடனே காணப்பட்டார். என்னோடே கூட விழித்திருங்கள் என்று சீஷரிடம் கேட்டுக் கொண்டார்.

அவர்கள் தூங்கியதைக் கண்ட இயேசு, என்னோடேகூட ஒரு மணிநேரமாவது விழித்திருக்கக் கூடாதா? என அவர் அவர்களைக் கேட்டுக் கொண்டது, ‘அவர்கள்’ சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபிக்கும்படிக்குத்தான் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இங்கே விழித்திருந்து என்று ஆண்டவர் சொன்னது, நித்திரையினின்று விழிப்பு மாத்திரமல்ல, சோதனைக்குட்படக்கூடிய வழிகளைக் குறித்த விழிப்புணர்வு, சோதனையில் விழுந்து விடாதபடிக்கு விழிப்புணர்வு ஆகியவற்றைப் பற்றியும் கூறுகிறார். இதற்கு ஜெபம் அவசியம்.

தேவ பெலனின்றி நாம் எந்த சோதனையையும் ஜெயிக்க முடியாதே.
இயேசு பலவிதத்தில் எச்சரித்தும், பேதுரு சோதனையில் அகப்பட்டது நமக்குத் தெரியும். தெரிந்திருந்தும் நாம் சுகபோகத்தில் தூங்குவதும், ஜெபத்தை அசட்டை செய்வதும், நித்திரை இல்லாத வேளையிலும் எச்சரிக்கையற்று ஜீவிப்பதும் நமக்குத் தான் கெடுதலைக் கொண்டு வரும்.

ஆகவே, எச்சரிப்புடனும், விழிப்புடனும் ஜெபத்தில் தரித்திருக்க அதற்கு நேரத்தை ஒதுக்க நாம் விழித்து கொள்ளுவோம்.

வேதத்தில் பார்ப்போம்,

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
1 பேதுரு 4:7

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்.
1 பேதுரு 5:8

ஆதலால், நீங்கள் நின்று ஜெபம் பண்ணும் போது எவைகளை கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
மாற்கு 11 :24.

பிரியமானவர்களே,

இந்த கடைசி காலத்தில் தேவ வல்லமை அதாவது பின்மாரியின் மழை ஊற்றப்படும் நேரம். ஆனால் மறுபக்கம் பிசாசின் வல்லமைகள் கட்டவிழ்த்து விடப்படுவதால் பூமியில் இருப்பவர்கள் இருளின் வல்லமைகளாலும் அதிகாரங்களாலும் பாதிக்கப்படுவார்கள்.

இதை தான் தீங்கு நாள்கள் வருவதால் தேவனுடைய சர்வாயுதவர்கத்தை தரித்து கொள்ளுங்கள் என்று பவுல் எச்சரிக்கிறார். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
எபேசியர் 6:12,13. என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.

மேலும் 18 ம் வசனத்தில் எந்த சமயத்திலும் பரிசுத்த ஆவியினாலே ஜெபம் பண்ணி எப்பொழுதும் விழித்து கொண்டிருங்கள் என்று பவுல் எச்சரிக்கிறார்.

இன்றைக்கு உலகத்தில் எந்த பக்கம் பார்த்தாலும் போராட்டங்கள், பாவங்கள், அருவருப்புகள், மனிதர்கள் பலர் பணப் பிரியர்களாகவும், தற்பிரியர்களாகவும், சுபாவ அன்பு இல்லாதவர்களாகவும் மாறி விட்டனர்,

எங்கு பார்த்தாலும் கொள்ளை நோய்கள். சபைகளில் தேவபயம் இல்லை. அநேக ஆண்டவருடைய பிள்ளைகள் உலக ஆசை இச்சைகளில் மயங்கி விழுந்து விடுகின்றனர்,

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் ஜெபிக்க சென்றார்.அவர் சீஷர்களிடத்தில் வந்து அவர்கள் நித்திரை பண்ணுகிறதை கண்டு பேதுருவை நோக்கி நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்க கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள், ஆவி உற்சாகமுள்ளது தான்,மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

இரண்டாவது தடவையும் அவர் வந்து பார்த்த போது இவர்கள் மீண்டும் நித்திரை பண்ணிக் கொண்டிருந்தார்கள்

.ஜெபித்து கொண்டிருந்த இயேசுவோ சிலுவையில் தேவ சித்தத்தை நிறைவேற்றி வெற்றி சிறந்தார்.தூங்கிக் கொண்டிருந்த பேதுருவோ கோபத்தில் போர் சேவகனின் காதை வெட்டினான். அது மாத்திரமல்ல வேலைக்காரியின் முன்பாக பயந்து போய் இயேசுவை மறுதலித்தான்.

பேதுரு இயேசுவை மறுதலிப்பதற்கு முக்கிய காரணம் அவன் ஜெபிக்காமல் தூங்கி கொண்டிருந்ததேயாகும்.

இன்றைக்கு ஜெபிக்காத அநேகரை பிசாசானவன் வஞ்சித்து பாவத்திலும் கள்ள உபதேசத்திலும் அடிமைபடுத்தி விலைமதிக்க முடியாத இரட்சிப்பை விட்டு விலகி செல்லும்படி செய்கிறான்.

(நீதிமொழிகள் 8-17)ஆனால் தேவனை நேசிக்கிற ஒரு கூட்டம் ஜனங்கள் அதிகாலையில் எழுந்து தாகத்தோடு அவர் சமூகத்தில் காத்திருந்து அவரது கிருபையை அதிகமாக பெற்று கொள்கிறார்கள்.

எனவே இந்த கடைசி நாள்களில் உங்கள் பிள்ளைகள் மற்றும் வாலிபர்களை ஜெபிக்க வையுங்கள். ஜெபிப்பது என்றால் சாதாரணமான ஜெபம் அல்ல, தேவ சமூகத்தில் காத்திருந்து தேவ வல்லமையை தேவ மகிமையை பெற்றுக் கொள்ளும்படியான ஜெபம்.

இதைத் தான் சீஷர்கள் மேல்வீட்டரையில் பெற்று கொண்டார்கள். தேவ வல்லமையை அதாவது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று கொண்டவர்கள் அதன் பிறகு முடிவு பரியந்தம் தேவனுக்கு சாட்சியாக காணப்பட்டார்கள்.

இந்த கடைசி காலத்தில் நம்முடைய தனிப்பட்ட ஜெப வாழ்க்கை தான் நமக்கு ஜெயத்தை தந்து தேவனுக்கு முன்பாக நம்மை பாத்திரவானாக நிறுத்தும்.

ஆகையால் இனிச் சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் லூக்21-36. என்று இயேசு சொன்னதற்கு நாம் கீழ்படிவோம்.

கர்த்தரின் பாதத்தில் புத்தியுள்ள கன்னிகைகளாக விழித்திருந்து அவரின் வருகைக்கு ஆயத்தமாவோம்.
ஆமென்.

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God